News Just In

9/13/2022 08:59:00 PM

இலங்கையில் 10000 ஹோட்டல்களை மூட வைத்த கோதுமை மா!

இலங்கையில் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக அதன் விலை உச்சம் தொட்டுள்ளதுடன் மக்கள் அதனை பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாவை நம்பிய பேக்கரி தொழில் முற்றாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பேக்கரி தொழிலில் ஈடுபட்டவர்கள் அதனை கைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று வாகனங்களில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதும் பெரும்பாலும் முடக்கத்திற்கு வந்துள்ளன.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில் சுமார் 10,000 ஹோட்டல்கள், கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இவை தவிர, கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் காரணமாக நாடு ழுழுவதும் உள்ள அரச நிறுவனங்களில் 3,000 சிற்றுண்டிச்சாலைகளும் 4,600 பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மேற்குறிப்பிட்ட பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நிகழ்வுகளுக்கான (திருமண வீடுகள், மரண வீடுகள் ) உணவு மற்றும் பான விநியோக சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

உணவு வகைகளின் விலை உயர்வும் இந்த நிலைக்கு மற்றொரு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், கேக், புடிங், வட்டிலப்பம் போன்றவற்றை வீட்டில் தயாரிக்கும் சுமார் 60,000 பேர் முட்டை மற்றும் கோதுமை மா தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். சம்பாதிப்பதை விட உணவுக்காக அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், வர்த்தக மாஃபியாவிலிருந்து நுகர்வோரை பாதுகாக்க நுகர்வோர் சட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments: