News Just In

7/08/2022 12:03:00 PM

மீராவோடையில் சேதமடைந்த நிலையில் வடிகான் மூடி!




(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை - 4 ஜே.பி. குறுக்கு வீதியின் பிரதான வடிகான் மூடி சேதமடைந்து காணப்படுகிறது.

சேதமடைந்து காணப்படும் சுமார் 7 அடி ஆழம் கொண்ட பிரதான வடிகானுடன் இணைந்த குறித்த வீதியால் போக்குவரத்து செய்ய சிரமப்படுவதாக அவ் வீதியைப் பயன்படுத்தும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மிக நீண்ட காலமாக கவனிப்பாறற்ற நிலையில் காணப்படும் இவ் வீதியால் தாம் தினமும் அச்சத்துடன் பயனிப்பதாக பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் யாரும் வடிகானுக்குள் விழுந்து விடாமல் மரக்கிளைகள் போடப்பட்டு அடையாளப்படுத்தியுள்ள, இவ் வீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: