News Just In

7/19/2022 01:15:00 PM

மூதுர் பிரதேச பின்தங்கிய தமிழ் கிராமத்தில் சுகாதார திணைக்களத்தின் அசமந்த போக்கினால் இடம்பெற்ற பிரசவ காலமரணம்!!


A to Z Media

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவின் வீரமாநகர் கிராமத்திலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரையாகச் சென்ற 19வயதுடைய இளம் கர்ப்பவதியொருவர் நேற்றிரவு இடைநடுவே உகந்தையில் குழந்தையைப் பிரசவித்தார்.

இதன் போது சீரான வைத்தியமின்மை காரணமாக குழந்தை இறந்த துர்ப்பாக்கிய சமபவம் நிகழ்ந்துள்ளது.அதிகளவான குருதிப் பெருக்கின் காரணமாக ஆபத்தான நிலையில் தாய் இராணுவத்தினரால் அருகிலிருந்த மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுகாதார திணைக்களத்தின் நடைமுறைகளின் பிரகாரம் கர்ப்பவதிகள் இவ்வாறான பாதயாத்திரைகளில் கலந்து கொள்ளாமல் இருக்க அவ்வப் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டுக் கண்காணிக்கப்படுவர். ஆனால் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் அத்தியவசியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான எரிபொருள் வழங்கப்படவில்லை .இதனால் கர்ப்பவதிகளுக்கான நிறைவான சிகிச்சைகளோ ஆலோசனைகளோ வழங்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே வீரமாநகரைச் சேர்ந்த டிலோஜினி விஜயகாந்தன் என்கிற 19வயதுடைய கர்ப்பிணித்தாய் இந்த ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளார் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: