News Just In

7/25/2022 06:27:00 AM

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருளுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி -வெளியான அறிவிப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை விநியோகிப்பதை மேலும் கட்டுப்படுத்தியுள்ளதாக இலங்கை தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் செயலாளர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விடுவிக்கப்படும் தொகை உட்பட இன்றைய நிலைவரப்படி நாளாந்தம் மூவாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் நான்காயிரம் மெட்ரிக் தொன் டீசல் மட்டுமே கூட்டுத்தாபனம் விநியோகம் செய்வதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஓகஸ்ட் மாதம் முதல் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் பணமில்லை எனவும், ஓகஸ்ட் மாதத்திலும் பணம் கிடைக்காது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, தற்போதுள்ள இருப்புகளை பல்வேறு முறைகள் மூலம் முடிந்தவரை பயன்படுத்த அரசு உத்தேசித்துள்ளது என்றார்.

No comments: