News Just In

7/11/2022 12:27:00 PM

கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை வரலாற்றில் மாணவர்கள் அதிகூடிய இடங்களை பெற்று மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு !




(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை வலய பாடசாலைகளுக் இடையிலான மெய்வல்லுனர் போட்டி இம் மாதம் 4ம்,5ம், திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது

குறித்த மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை வலயத்தில் உள்ள 5 கோட்டங்ககளை சேர்ந்த சுமார் 30 பாடசாலைகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவ மாணவிகள் 5 முதல் இடங்களையும் 9 இரண்டாம் இடங்களையும் 4 மூன்றாம் இடங்களையும் பெற்று மாகாண மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

இவ் வெற்றியானது அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை வரலாற்றில் அதிகூடிய போட்டி நிகழ்ச்சிகளில் மாகாண மட்ட போட்டியில் மாணவ மாணவிகள் பங்குபற்றுவது இதுவே முதல் முறையாகும் இவ் வீர,வீராங்கனை
களுக்கு பயிற்றுவித்த எம்.ஏ.எம்.றியால்,யூ.எல்.எம்.
சிபான்,ஏ.டப்ளியு.எம்.ஆசாத்கான் ஆகியோருக்கு பாடசாலை அதிபர்.எம்.எஸ்.எம்.பைசால் மற்றும் பிரதி அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம்,நலன் விரும்பிகள் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


No comments: