News Just In

7/15/2022 06:47:00 AM

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

இராணுவ வீரர்கள் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மிகக் கடுமையான மனிதாபிமானமற்ற தாக்குதலை நேற்றுமுன்தினம் (13-07-2022) மாலை நாடாளுமன்ற வளாகத்தைக் கைப்பற்றுவதற்காக வந்த வன்முறைக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டதாகக் காட்டுகிறது.

இந்த அறிவிப்பின் பிரகாரம், அந்த இடத்தில் கடமையாற்றிய இரு இராணுவத்தினரையும் இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளால் மயக்கமடைந்து தாக்கிய பின்னர் குறித்த இராணுவத்தினரின் இரண்டு T-56 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இரண்டும் கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

இந்தச் செயல் கடுமையான சட்ட விரோத செயல் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இரண்டு வீரர்களின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ்/பாதுகாப்புப் பிரிவினரை தாக்கி இளைஞர் சமூகத்தை இவ்வாறான சட்ட விரோத செயல்களுக்கு தூண்டுவது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களை ஒடுக்குவது என்பன சாதாரண மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு செயலாளர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அனைத்து அறிவுறுத்தல்களும் உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்வார்கள் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: