News Just In

6/03/2022 06:38:00 AM

முப்படைகளை களத்தில் இறக்கும் வட மாகாண ஆளுநர்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு முப்படையினர் உள்ளிட்ட தரப்பினரை இணைத்து வேலை செய்யப்போவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) தெரிவித்துள்ளார்.

யாழ்.கைதடிப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட தொகுதியில் நேற்று (02-06-2022) காலை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அரச உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலையில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று உள்ளூர் உற்பத்தி துறையை தொழில் துறையாக மாற்ற வேண்டும். குறிப்பாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, உப்பளம் உள்ளிட்ட விடயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் பிரிந்து வேலை செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

அத்துடன் முப்படைகளையும் இணைந்து இந்த வேலைகள் நடைபெறும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) குறிப்பிட்டுள்ளார்.

No comments: