News Just In

6/22/2022 10:10:00 AM

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் - ஆபத்தில் சுகாதார கட்டமைப்பு





அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும், தற்போது வைத்தியசாலை பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் வெளிநாடுகளில் தொழில்களுக்காக ஈடுபடுவதனால் சுகாதார கட்டமைப்பு பாரிய வீழ்ச்சிக்குள்ளாகுவதனை தவிர்க்க முடியாதென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதி இயக்குனர் வைத்தியர் சுன்துஷ் சேதாபதி தெரிவித்துள்ளார்.

நாட்டை விடடு வெளியேறும் வைத்தியர்கள்
தற்போது ஏராளமான மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை அரசாங்கத்தின் தலையீட்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பினால் நாட்டுக்கு டொலர்கள் கிடைக்கும். ஆனால் அவர்கள் தற்போது தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதனால் நாட்டின் டொலர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தானும் மேலும் பல விசேட நிபுணர்களும் அடுத்த வாரம் வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நிச்சயமற்ற சூழ்நிலை
தாம் இன்னும் நாட்டில் பணியாற்ற விரும்புவதாகவும் ஆனால் நாட்டில் பொருத்தமான சூழல் உருவாக்கப்படுமா என்பது நிச்சயமற்ற நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்ல அனுமதி கோரி தம்மிடம் அதிகளவான வைத்தியர்கள் வருவதாகவும், இது போன்ற ஒரு நாட்டுக்கு இது மிகவும் மோசமான நிலை எனவும் பல் மருத்துவ நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments: