News Just In

6/21/2022 10:24:00 AM

அக்கரைப்பற்று மாநகர சபையினால் உள்ளக உதைப்பந்து அரங்கு திறந்து வைப்பு..!




நூருல் ஹுதா உமர்

பிராந்திய இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் எண்ணக்கருவில் அக்கரைப்பற்று மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக உதைப்பந்து அரங்கினை (Futsal) பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைத்து கையளிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது தேசிய காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம விருந்தினராய் கலந்து கொண்டு உள்ளக அரங்கின் முதலாவது உதைப்பந்து போட்டியினை துவக்கி வைத்ததுடன், இவ்வரங்கில் இடம்பெறும் முதல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பிராந்திய விளையாட்டு வீரர்களின் ஆட்டத்திறனை ஊக்குவித்து, அவர்களை தேசிய மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களாய் பட்டை தீட்டுவதுடன் ஆரோக்கியமும், ஒழுக்க விழுமியங்களும் மிகுந்த இளைஞர் சமுதாயத்தினை கட்டியெழுப்புவதும் இவ்வுள்ளக மைதானம் உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கங்கள் ஆகும் என மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் இந்நிகழ்வின் போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழக பிரதானிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments: