News Just In

5/05/2022 10:27:00 AM

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுக்கும் விஷேட அறிவிப்பு





குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (05) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணனி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த தீர்மானத்தை பொதுமக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 3ஆம் திகதி கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திணைக்களத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டு நேற்று (04) மீளமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: