வெலிகம – பெலன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது வெலிகம பிரதேசத்தில் உள்ள மீன்பிடி கடையொன்றில் மது விருந்து வைத்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments: