புனித நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்ட பெண்ணொருவர் மரணமடைந்துள்ள சோகச் சம்பவமொன்று 03.05.2022 அன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பதுரியா பள்ளிவாசலில் வைத்தே இந்த மரணச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தோடு பெருநாள் தொழுகைக்காக வந்த பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முகம்மது இப்றாஹீம் மைமூனாச்சி எனும்
9 பிள்ளைகளின் தாய் ஒருவரே பள்ளிவாசலில் வைத்து மரணமடைந்துள்ளார்.
இதேபோன்று, ஒரு நோன்புப் பெருநாள் தினத்தில் மரணமடைந்த பெண்ணின் மகள் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்த சோகச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமடைந்த பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த மைமூனாச்சியின் ஜனாஸா நேற்று (3) வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: