அமைச்சரவைப் பதவிகளைப் பெற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற தமது உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.
அரசாங்கத்துடன் இணைவது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணியின் கொள்கைக்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்கார பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: