நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது.
ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த மையத்தின் இணை பேச்சாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இப்போது ஜனாதிபதியின் விலகல் அரசாங்கத்தால் பேசப்படுகிறது, எனவே இந்த அநியாயமான கைதுக்கு எதிராக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
கைது செய்யக்கூடாது என பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் மற்றுமொரு தொடர் போராட்டம் ஆரம்பமாகின்றது
No comments: