News Just In

5/27/2022 12:31:00 PM

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம் இல்லை - பிரதமர்



இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பத்திரிக்கைகள் சிலவற்றில் செய்திகள் வௌியாகியிருந்தன.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள பிரதமர் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர ஏனைய அனைத்து அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதேபோல், இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக பொது மக்களுக்கான நிவாரணங்கள் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: