யாழில் உள்ள பகுதி ஒன்றில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் இன்று காலை அவரது வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி, நாவற்காட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதன்போது, வரணி நாவற்காட்டு பகுதியைச் சேர்ந்த 65 வயதான வ.துரைராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதியவரது சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: