News Just In

5/12/2022 10:02:00 PM

மறைந்திருக்கும் மகிந்தவின் அரசியல் விளையாட்டு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த பொது தேர்தலில் ரணில் விக்ரமிங்க வெறும் 20000 என்ற சிறிய வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தார். எனினும் தேசிய பட்டியலில் உறுப்பினர் பதவி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.



அவ்வாறு தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமராகி வரலாற்றில் இடம்பிடித்த ஒருவர் இலங்கையில் மாத்திரமின்றி உலகத்திலேயே இல்லை என தெரியவந்துள்ளது.



அத்துடன் அவர் ஆறாவது தடவையாகவும் பிரதமராக பதிவி பிரமாணம் செய்துள்ளார். இதுவும்ஒருஉலகசாதனைகளில்ஒன்றாகபார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரசியல் நெருக்கடி காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்துடன் கொழும்பை விட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார்.

எனினும் கொழும்பிற்கு வெளியில் இருந்து தென்னிலங்கை அரசியலை கையாளும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார். மகிந்த போட்ட திட்டத்திற்கு அமைய கோட்டபாய அதிரடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம் ஒரு ஆசனத்தை மட்டும் தன்வசம் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்று உலக சாதனையை படைத்துள்ளார்.



இந்நிலையில் ரணிலுக்கு முதல் நபராக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார். “இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு வாழ்த்துக்கள்.

இந்த இக்கட்டான காலகட்டங்களில் நீங்கள் பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை அடுத்து வரும் சில தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன், தலைமறைவான மகிந்தவும் கொழும்பிற்கு வரவுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: