News Just In

5/26/2022 03:12:00 PM

ஜெனரல் சவேந்திர சில்வா இராஜிநாமா செய்யவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவிப்பு



இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் சவேந்திர சில்வா இராஜிநாமா செய்யவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்படவுள்ளார்.மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மே மாதம் 31 ஆம் திகதியுடன் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்கவுள்ளார்.
இதேவேளை, முப்படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பெறுப்பேற்கவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: