News Just In

5/12/2022 05:08:00 PM

மற்றுமொரு தீவை வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு விட்டது இலங்கை அரசு!

கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான இந்த தீவை குத்தகைக்கு விடுவது தொடர்பில் 2000 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது என சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இருப்பினும்,எதனை நிர்மாணிப்பதற்காக இந்த தீவு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவில்லை. பல்லுயிர்களை கொண்டுள்ள இந்த தீவில் நிர்மாணிப் பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுச் சூழல் சம்பந்தமான அறிக்கையும் பெறப்படவில்லை என சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: