News Just In

5/06/2022 02:58:00 PM

சாணக்கியனுக்கு ராஜபக்சக்களுடன் தொடர்பு ரணில் சாடல் !



சாணக்கியனுக்குதான், ராஜபக்சக்களுடன் தொடர்பு உள்ளது. எனக்கு அவ்வாறு எந்த தொடர்பும் இல்லை என இரா. சாணக்கியனுக்கு ரணில் விக்கிரமசிங்க பதிலடி கொடுத்தார்.

இது குறித்து சபையில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,

ராஜபக்சக்களுக்காக நான் செயற்படுவதாக ராசமாணிக்கம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.அது அப்பட்டமான பொய் என்றும் அவருக்குதான் ராஜபக்சக்களுடன் தொடர்பு இருக்கின்றதாகவும் ரணில் கூறினார்.

அதோடு சாணக்கியன் பட்டியிருப்பு தொகுதி அமைப்பாளராகக்கூட செயற்பட்டுள்ளதாக தெரிவித்த ரணில், மஹிந்த சரணம் கச்சாமி, கோட்டா சரணம் கச்சாமி என பல்லவி பாடுவது சாணக்கியனின் வழமையாக இருக்கலாம் எனவும் சாடினார்.

No comments: