News Just In

4/03/2022 05:39:00 PM

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள் – நாமலின் மனைவி உள்ளிட்ட சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்?


நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக, மக்களிடத்தில் எதிர்ப்புக்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.இந்நிலையிலேயே அவர்கள் நாட்டை விட்டு வெளியியேறியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவின் மனைவி, லிமினி ராஜபக்ஷவும் அவரது பெற்றோரும் வெளிநாட்​டில், தெரியாத இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: