News Just In

4/19/2022 06:47:00 AM

உக்ரைனில் களமிறங்க தயார்: மத்திய கிழக்கு நாட்டின் படைகள் அறிவிப்பு!

உக்ரைனில் அடுத்தகட்ட போரில் சிரியா படைகள் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரில் களமிறங்க தாங்கள் தயாராக இருப்பதாக பிரிகேடியர் ஜெனரல் சுஹைல் அல்-ஹசன் பிரிவு அறிவித்துள்ளதை அடுத்து, சிரியா இராணுவத்தினர் பலர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

மட்டுமின்றி, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பாலைவனத்தில் பல ஆண்டுகள் போரிட்டு அனுபவம் வாய்ந்த வீரர்களும் ரஷ்ய துருப்புகளுடன் உக்ரைனில் களமிறங்க உள்ளனர்.

இதுவரை, ஒரு சிறிய எண்ணிக்கையிலான படையினர் மட்டுமே உக்ரைனில் களமிறக்கப்படுவதற்கு முன்னதாக இராணுவப் பயிற்சிக்காக ரஷ்யாவிற்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து 16,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்ததாக ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தரப்பு உக்ரைன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் பெருமையடித்துள்ளனர்.

ஆனால், சிரியா படைகளை உக்ரைனில் அடையாளம் காணவில்லை என அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சிரியாவை கண்காணிக்கும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.






இதனிடையே, ரஷ்யா முன்னெடுத்துள்ள இந்த நகர்வானது கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில வாரங்களில் சிரியா படைகள் உக்ரைனில் களமிறக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது.

No comments: