இன்று (15) பிற்பகல் 1 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எரிபொருள் விநியோகம் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாவாகவும், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவாகவும் மட்டுப்படுத்தப்படும்.
மேலும், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்புகளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டும் வழங்குவது 5,000 வரையில் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்துகள், லொறிகள் மற்றும் உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
No comments: