News Just In

4/02/2022 04:15:00 AM

இலங்கையின் மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது!


இலங்கையின் மேல் மாகாணத்தில், நேற்று  (01.04.22) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று  (02.04.22) அதிகாலை 6.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபரும் சிரேஷ்ட காவற்துறை ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று  (01.04.22) அதிகாலை நாட்டின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டது.

மிரிஹான பெங்கிரிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக இவ்வாறு காவற்துறை ஊரடங்கு சட்டம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: