உக்ரைன் மீது ரஷ்யா 61 நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம், உக்ரைனுக்கு சாத்தியமான விற்பனையை அங்கீகரித்துள்ளது. அத்துடன், சட்டப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்றத்திடம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த ஆயுத விற்பனையைத் தடுக்க முடியும். ஆனால் பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு அமெரிக்கா வலுவான ஆதரவை வழங்கி வருவதால் ஆயுத விற்பனையை தடுக்க வாய்ப்பில்லை.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை இலக்குகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்கு ஆதரவாக இந்த விற்பனை இருக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
No comments: