News Just In

4/03/2022 04:20:00 PM

நகரமும் நெடுஞ்சாலையும் வெறிச்சோடியது!

நாடாளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பின் ஏறாவூர் நகரமும் அந்நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பொலிஸார் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.

நிலைமை இயல்பாக இருந்திருந்தால் இந்த நாட்கள் சிங்கள தமிழ் புத்தாண்டு மற்றும் றமழான் நோன்புப் பெருநாள் பண்டிகைகளுக்காக ஏறாவூர் நகர கடைத் தெரு களைகட்டியிருக்கும் என நகர வர்த்தகர்கள் தெரிவித்து அங்கலாய்க்கின்றனர்.

.எச்.ஹுஸைன்

No comments: