News Just In

4/24/2022 03:40:00 PM

விலை அதிகரிப்பை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் ஆர்பாட்டமும் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரிபுரம் மாதர்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் என பலர் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டுப்பாட்டு விலையை கொண்டுவா, கோட்டா மகிந்த அரசே ஆட்சியை விட்டு வெளியேறு, போராடும் மக்களை சுட்டுக்கொல்லாதே, போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

No comments: