News Just In

4/18/2022 06:18:00 AM

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி!

ஏழு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நண்பர்களோடு நேற்றுமுன்தினம்(16) விளையாடிக் கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றில் சிறுவன் விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுவன் தந்தையின் பராமரிப்பில் வசித்து வருகிறார்.

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: