News Just In

3/09/2022 11:55:00 AM

சீரழிந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தீர்வு!K.D.லால்காந்த



சீரழிந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தீர்வு எனும் தொனிப்பொருளில் காவத்தை நகரின் வியாபார கட்டிட தொகுதி மேல்மாடியில் கூட்டம் நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் K.D.லால்காந்த அவர்கள், இரத்தினபுரி மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சாந்த பத்மகுமார, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதேச சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் அமைப்பின் இரத்தினபுரி மாவட்ட தலைவர், வைத்தியர் ஜயசூரிய மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய K.D.லால்காந்த அவர்கள்
எமது நாட்டை கட்டியெழுப்பி சிறந்த நாடாக மாற்ற வேண்டுமென்றால் ஊழலற்ற நேர்மையான ஆட்சியாளர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும் 74 வருடங்களாக எமது நாட்டை ஆட்சி செய்த அனைவரும் மிகப்பெரிய ஊழல்வாதிகளே! எனவேதான் நாடு இந்த அளவு சீரழிந்து போயுள்ளது தற்பொழுது மக்களுக்கு ஆட்சி மாற்றம் தேவை அதற்காக சஜித் தலைமையிலான வாதிகளுக்கு ஆட்சியை ஒப்படைக்க முடியாது எனவேதான் ஊழலற்ற திறன்வாய்ந்த தேசிய மக்கள் சக்தி என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்துள்ளோம். நாட்டை சிறந்த முறை அபிவிருத்தி செய்வதற்கு எங்களால் மற்றும் முடியாதுபொது மக்களாகிய நீங்களும் பங்காளர்களாக மாறவேண்டும் என்றார்.

மேலும் சாந்த பத்மகுமார பேசுகையில் உலக நாடுகளில் ஒப்பிடுகையில் எமது நாட்டில் அதிக வழங்கல் காணப்படுகின்றது அதிலும் எமது மாவட்டத்தில் சிறப்பான வளங்கள் கொட்டி கிடக்கின்றன இதை சரியான முறையில் பயன்படுத்தினால் எமது நாட்டின் அபிவிருத்திக்கு கணிசமான பங்களிப்பை நாம் வழங்க முடியும் தற்போது நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் திட்டங்கள் எதுவும் இன்றி வெளிநாட்டு கடன்களை மாத்திரமே நம்பி இருக்கின்றார்கள் மேலும் மேலும் எம்மை கடனாளியாக மாற்றுகிறார்கள் எனவே இதை மாற்றியமைக்கும் தேவை நம் எல்லோருக்கும் இருக்கின்றது என்றார்.

சுந்தரலிங்கம் பிரதீப் உரையாற்றுகையில்
ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக நாட்டில் இனவாதத்தை தூண்டி விட்டு மக்களைப் பிரித்து வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கிறார்கள். தமிழ் சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரே கூட்டாளிகள் ஆகியே நாட்டை கொள்ளையடித்து சீரழிக்கிறார்கள் ஆனால் மக்களாகிய எம்மை இனவாதம் பேசி பிரிக்கின்றார்கள் இனியும் நாம் சிந்தித்து செயல்பட்டால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த நாட்டை எமக்கு வழங்க முடியாமல் போகும் நாம் அனைவரும் ஒரு நாள் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டி வரும் இனியாவது சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தி மாற்றத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்வருமாறு அழைப்பு விடுப்பதாக கூறினார்.

S. Pradeep







No comments: