News Just In

3/11/2022 11:38:00 AM

வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம், மிளகாய் அரைக்கும் இயந்திரம், மலசலகூடம், கூரைதத்தகரங்கள் வழங்கி வைப்பு!!



பைஷல் இஸ்மாயில் -
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "நாடும் தேசமும் உலகும் அவளே" எனும் தொனிப்பொருளில் குச்சவெளி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு புல்மோட்டை உப அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின்போது, பெண்களை தலமைத்துவமாக கொண்ட குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம், மிளகாய் அரைக்கும் இயந்திரம், மலசலகூட கூரைதத்தகடு என்பன பிரதம அதிதி மற்றும் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.


No comments: