News Just In

3/27/2022 09:25:00 PM

ஏறாவூர் நகர சபை, ஏறாவூர்ப்பற்!றுப் பிரதேச சபை ஆகியவற்றின் மூன்று உறுப்பினர்கள் பதவி இழப்பு



ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் மற்றும் ஒரு உறுப்பினர் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் ஒரு உறுப்பினர் உட்பட மூவர் பதவி இழந்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் எம். பி. எம்;. சுப்யான் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு மார்ச் 18ஆம்; திகதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 262ஆம் அத்தியாயமான உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 10அ(1)(அ) என்னும் பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையின் உறுப்பினரும் அச்சபையின் பிரதித் தவிசாளரான மீராலெப்பே ரெபுபாசம் மற்றும் உறுப்பினரான அலியார் பாத்திமா பஜிகா ஏறாவூர்ப்;பற்று பிரதேச சபையின் உறுப்பினரொருவரான எம். எஸ். முஹம்மது ஜவ்பர் ஆகியோரே பதவியை இழந்துள்ளனர்.

இவர்களை கட்சி உறுப்புரிமையில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீக்கியுள்ளதால் இவர்கள் உள்ளுராட்சிமன்றங்களில் வகித்த உறுப்பினர் பதவியை இழந்துள்ளனர்.

.எச்.ஹுஸைன்


No comments: