இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது கமு /கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய சாய்ந்தமருது சபிலுல் லமா அடுத்த சுற்றான கொழும்பில் நடக்கவிருக்கும் தேசிய மட்டத்தில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இவ் சதுரங்க போட்டித்தொடர் 27.03.2022 சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. 08 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் கலந்து கொண்டு சபிலுல் லமா முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்
இவர் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 1 யில் கல்வி பயில்கிறார். கல்முனை பிராந்தியத்தில் பிரபலமான கணனி துறை சார் தொழிநுட்பவியலாளரான ஏ.எம்.எம். முபீன் மற்றும் எப். ஹஸீனாஆகியோரின் புதல்வி. இவர் இப் போட்டித் தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் அம்பாரை மாவட்ட சிறுமி ஆவார்.
நூருல் ஹுதா உமர்
No comments: