சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி முஹம்மத் மஜீத் மஸ்றூபா தலைமையில் இன்று (28) திங்கட்கிழமை காலை கலை, கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் முதன்மைப் பேச்சாளராக பெண்கள் கல்வி மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தொழிநுட்ப த்தினூடாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வாக சமூகவியல் துறைத்தலைவர் கலாநிதி எஸ்.எம். ஐயூபின் தலைமையில் சிறப்புக் கலந்துரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா ( வர்த்தக முகாமைத்துவ பீடம்), பொறியியலாளர் ஏ.எல்.எம். றிசாத் ( பொறியியல் பீடம்), ஏ.எம். றியாஸ் அஹமட் ( பிரயோக விஞ்ஞான பீடம்), எம்.வை. மின்னதுல் சுஹீரா ( இஸ்லாமிய அரபுமொழி பீடம்), ஏ.எப். சர்பானா (தொழிநுட்பவியல் பீடம்) ஆகியோர் பங்குபற்றினர்
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தரநிர்ணய மைய பணிப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எஸ். சபீனா, வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி. ஹசன் ஆகியோரும் மேலும் தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத், துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பல பிரதேச செயலகங்களின் பெண் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவிகள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும், மகளிர் சங்கங்களினது உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
No comments: