ரஷ்யா மேற்கொண்ட தீவிரமான தாக்குதலின் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகொம் (Ukrtelecom) கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கீவ் நகர அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை கடுமையாக செயலிழந்துள்ளது.
இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகிறோம். நேற்று காலை தொடங்கிய மின்தடை மாலை வரை நீடித்தது என தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் தாக்குதல் நடாத்தி வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
No comments: