News Just In

3/30/2022 06:36:00 AM

இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் அந்நாட்டு மக்கள் வீட்டிலிருந்து பணி புரிவதற்கு பரிந்துரைப்பு!

இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் அந்நாட்டு மக்கள் வீட்டிலிருந்து பணி புரிவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சில நாட்களில் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுதினம் அரச நிறுவனங்களில் வீட்டு அடிப்படையிலான முறைக்கு செல்லுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எந்த நிறுவனமும் எடுக்கவில்லை. நிதி நெருக்கடியால் மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம், அரசாங்க நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்த சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்கத்திற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம் அடுத்த சில நாட்கள் பொதுமக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

No comments: