News Just In

3/25/2022 12:24:00 PM

நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவுக்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருப்பு !



நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று 2022.03.25 அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரம் தெரிவித்துள்ள போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

இதனால் மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன வந்து சேரும் என எதிர்பார்த்து வீதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூவில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை எரிபொருள் கொள்வனவுக்காக நின்ற பலர் உயிரிழந்துள்ள சம்பவமும் இலங்கையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேநேரம் நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இருந்து ஆரம்பித்துள்ள எரிவாயு கொள்வனவு காண வரிசை கடற்கரை வீதியில் சென்று சுமார் 200 மீட்டர் தூரம் நீண்டு சென்றுள்ளது. இருந்த போதும் இன்னும் இந்த இடத்திற்கு எரிவாயு வந்து சேரவில்லை எனவும் அங்குள்ள மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்




No comments: