News Just In

3/02/2022 03:15:00 PM

நீங்கள் போருக்குப் பயப்படுகிறீர்கள், போலந்துக்கு சென்ற நீங்கள் ஏன் கீவ்-க்கு வரவில்லை –பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் கேள்வியை தொடுத்த ஊடகவியலாளர்


ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக விவாதிப்பதற்காக போலாந்து நாட்டிற்குப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிவந்த பெண் ஊடகவியலாளர் டாரியா கலேனியுக், பொரிஸ் ஜோன்சனிடம் கண்ணீருடன் எழுப்பும் கேள்விகள் மனதை உருகியுள்ளது.

ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டில் வசிக்கும் அப்பாவி மக்களைக் கடுமையாக தாக்கி வருகிறது. அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

நீங்கள் கியூவுக்கு வரவில்லை… ஏனென்றால் நேட்டோ மூன்றாம் உலகப் போரை கண்டு பயப்படுகிறது. ஆனால் மூன்றாம் உலகப்போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

உக்ரைனில் உள்ள குழந்தைகள் குண்டுவெடிப்புக்கு மத்தியில் அச்சத்துடன் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதுதான் தற்போதைய உக்ரைன் மக்களின் நிலைமை எனக் கண்ணீர் மல்க குறித்த ஊடகவியலாளர் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துப் பிரித்தானிய பிரதமர், “நீங்கள் விரும்பும் வகையில் உதவுவதற்கு எங்களால் முடியவில்லை என்பதை நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறேன் என்கிறார்.ரஷ்யாவுடன் நேரடிப் போரில் ஈடுபட்டால் அதனுடைய பின் விளைவுகள் மிகப் பெரியளவில் இருக்கும் என்றும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.

No comments: