News Just In

3/26/2022 04:01:00 PM

இராணுவ தளபதியிடம் இருந்து சுமந்திரனுக்கு வந்த அழைப்பு !


ஜனாதிபதியுடனான சந்திப்பு நிறைவடைந்து, வெளியேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கு, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியுடனான சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கில் காணிகளை பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.இந்தநிலையில் இதற்கு பதிலளித்துள்ள இராணுவ தளபதி அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கு, கிழக்கில் காணி பிரச்சினைகள் இருக்குமானால், அது குறித்து இராணுவ தளபதியுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தமக்கு கூறியதாக சுமந்திரன், ஷவேந்திர சில்வாவிடம்  தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: