பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை கோபாலபுரம் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் ஆகியோர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
குறித்த விஜயத்தின்போது, வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டதுடன், சிகிச்சை வழங்கப்படுகின்ற முறை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். மேலும், வைத்தியசாலையில்
நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் மற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
No comments: