News Just In

3/29/2022 02:12:00 PM

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி நீடிப்பு

 இன்றைய தினம் (29) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை நீடிக்க மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V, W வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
adstudio.cloud

No comments: