News Just In

3/30/2022 01:16:00 PM

அதிகரிக்கும் நெருக்கடிகள் – நாட்டை முழுமையாக முடக்கத் தயாராகின்றது அரசாங்கம்?


சில நாட்களேனும் நாட்டை முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பினை தலைமையகமாக கொண்ட தமிழ் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன், மின் வெட்டினை வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: