News Just In

3/02/2022 01:23:00 PM

சிவனருள் பவுண்டேஷன் அமைப்பின் மஹா சிவராத்திரி விழா...!!



A to Z Media

சிவனருள் பவுண்டேஷன் அமைப்பின் மஹா சிவராத்திரி விழா திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் உள்ள நீனாக்கேணி கிராமத்தில் நேற்று(01) இடம்பெற்றது.

குறித்த சிவராத்திரி விழாவானது நீனாக்கேணி கிராமத்தில் சிவனருள் பவுண்டேஷனின் இலவச சிவனருள் இளந்தளிர் கல்வி நிலைய வாளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருக்கேதீஸ்வர கௌரிசமேத லிங்கேச்வர நாதர் ஆலயத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

சிவலிங்கத்திற்கு விசேட அபிஷேகத்துடன் நடைபெற்ற பூசை நிகழ்வானது விசேட பயணை நிகழ்வுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
குறித்த நிகழ்வில் கல்வி நிலைய மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள், கல்வி நிலைய ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.





No comments: