News Just In

3/03/2022 02:13:00 PM

ஏறாவூரில் மட்பாண்ட உற்பத்தி கைத்தொழில் உற்பத்திக்கிராம நிலையத்தை திறந்துவைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்.



(செங்கலடி நிருபர் சுபா)

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 04ம் குறிச்சி பகுதியில் மட்பாண்டக்கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது.சௌபாக்கியா உற்பத்திக்கிராமம் திட்டத்தின் கீழ் ஏறாவூர் 04ம் குறிச்சி பகுதியில் 05மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீட்டில் குறித்த கட்டடிடம் திறந்துவைக்கப்பட்டதுடன் மட்பாண்ட உற்பத்திக்கான உபகரணங்களும் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.சுமார் 40 மட்பாண்ட கைத்தொழில் உற்பத்தியாளர்கள் இந் நிலையத்தினால் பயனடையவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்இ மதகுருமார், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் இ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சரின் அலுவலக உத்தியோகர்கள், மட்பாண்ட உற்பத்தியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்.

குறித்த எமது பிரதேசத்தில் அதிகமாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் உள்ளனர் அவர்களுக்கு வளரீதியான பிரச்சிணை அதிகம் உள்ளது. கடந்த காலத்தில் உங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக என்னால் 10இலட்சம் ரூபா நிதி பெற்றுத்தரப்பட்டது. அதன் பின் இன்று உங்களுக்கு 50இலட்சம் ரூபா பெறுமதியில் உங்களுக்கான இக்கட்டிடம் உபகரணங்களுடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சௌபாக்கியா உற்பத்திக்கிராமம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள பௌதீக வழங்களை கண்டறிந்து அதனூடாக உற்பத்திக்கிராமங்களை உறுவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகிறது. நாம் இந்த உதவிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 பிரதேச செயலகங்களில் உள்ள கிரமங்களில் பெற்றுள்ளோம்.மேலும் பிரதேச செயலாளர் ஊடாக பணை உற்பத்தி சார்ந்த திட்ட முன்மொளிவுகளை அனுப்பியுள்ளோம்.

கிராமங்கள் தன்னிறைவடையும் போது நாடு தன்னிறைவடையும். எமது மாவட்டம் அணைத்து வளங்களையும் கொண்டமைந்த மாவட்டம். இங்குள்ள வளங்களைபயண்டுபடுத்துவதற்கானமுறைமைஇங்குஉருவாக்கப்படவில்லை. அதுதான் இங்குள்ள பாரிய குறைபாடு. வளங்களை பெற்றுக்கொடுத்து நாம் ஒழுங்கு செய்யும் போது எமக்கு தேவையானதை நாம் உற்பத்தி செய்ய முடியும். இந்த நாடும் இன்னொரு நாட்டில் தங்கிருக்க வேண்டிய அவசியம் உருவாகாது.

குண்டு வெடிப்பு இங்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின் கொரோனா தற்போது ரஸ்யா உக்ரைன் மோதல் ரஸ்யா உலகத்திலையே கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவிற்கு அடுத்திருக்கும் பெரிய நாடு ரஸ்யா. இவை எல்லாம் நாம் அடுத்தடுத்து எதிர்நோக்கும் சவால்கள் . அரசாங்கத்தை பொருத்தவரையில் இந்த சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டை கடன் சுமையில் இருந்து பாதுகாக்க வேண்டும். பல விமர்சனங்கள் விசமத்தனங்களும் உள்ளது.

இன்று உலகலாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. எமது நாட்டில் மட்டுமல்ல உலகலாவிய ரீதியில் அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழலில் பல்வேறு பொருளாதார நெருக்கடி எமக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா துறை பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளோம்.இவ்வாறு பல கபிரச்சிணைகள் பிரச்சிணைக்கான தீர்வை வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதை அரசு பல வகைகளில் முன்னெடுத்துவருகின்றது.



No comments: