News Just In

3/08/2022 10:29:00 AM

வெளிநாட்டு பணவரவுகளை அதிகரிக்க ஊக்குவிப்புக்களை வழங்க அனுமதி!

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம் வருடாந்தம் 7-8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எமது நாட்டுக்குப் பணவரவாகக் கிடைக்கின்றது.


அவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் அந்நிய செலாவணியை எதிர்வரும் புதுவருட காலத்தில் எமது நாட்டுக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவித்தல், புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் தங்கி வாழ்பவர்களுக்கு அதிக பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக தற்போது செலுத்தப்பட்டு வரும் 10/- ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38/- ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



No comments: