News Just In

3/02/2022 07:54:00 AM

சுமார் 80,000 உக்ரேனியர்கள் ரஷ்யாவுடனான மோதலில் பங்கெடுக்க தாயகம் திரும்பினர்

ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக 80,000 உக்ரேனியர்கள் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்றும் அவர்கள் இராணுவ அணிகளிலும் பிற பிராந்திய பாதுகாப்புப் படைகளிலும் சேர்ந்துள்ளனர் என்றும் அமைச்சகம் கூறியது.

இதேவ‍ேளை தற்சமயம் உக்ரேன் முழுவதும், சாதாரண குடிமக்கள் வீடுகளில் பெற்றோல் குண்டுகளை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்ளும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கிய்வ், நகரவாசிகள் தெருக்களில் ஆயிரக்கணக்கான பெற்ரோல் குண்டுகளை தயாரித்து நகரின் மீது ரஷ்ய தரைப்படை தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர்.



இதனிடையே செவ்வாய்கிழமை கிய்வ் நகரில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தை ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.

இதனால் உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம் தொலைக்காட்சி அலைவரிசைகள் தற்காலிகமாக செயல்படுவதை நிறுத்தியது. ஆனால் காப்புப்பிரதி ஒளிபரப்புகள் விரைவில் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments: