மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாற்று பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) ம் திகதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
No comments: