"Global Hire" எனும் நிறுவனமானது கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்துடன் இணைந்து கனடா மற்றும் லண்டனில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக 06.12.2021 , 16.12.2021 ஆகிய திகதிகளில் பொய்யான விளம்பரங்கள் வெளியாகி உள்ளது.
"Global Hire" எனும் நிறுவனதிற்கும் CTCT அமைப்புக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. CTCT அமைப்பானது ஆதாயம் ஈட்டாத ஒரு சமூக சேவை நிறுவனம். இது கனடாவிலும், இலங்கையிலும் கல்வி மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டுவரும் அமைப்பாகும். CTCT அமைப்பின் பணிப்பாளர் சபையின் அங்கத்தவரின் பெயரிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட கையொப்பம் போலியானது. இந்த விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் தமது பணத்தை இழந்துவிட வேண்டாம் என கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் (CTCT) தலைவர் எமது ஊடகத்தினூடாக அறியத்தருகிறார்.
No comments: