News Just In

2/04/2022 06:32:00 AM

இன்றைய நாளுக்கான வானிலை!

நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை, மன்னார் ஆகிய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும். 

வளிமண்டலவியல் திணைக்களம்

No comments: