News Just In

2/06/2022 11:02:00 AM

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்


பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.ஜனவரி 8 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான அவர் மும்பையின் ப்ரீச் கேண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல் நிலை அண்மையில் முன்னேற்றம் கண்டது. எனினும் பின்னர் உடல் நிலை மோசமடைந்தமையினால் துரதிர்ஷ்டவசமாக இன்று காலை காலமானார்.

அவரது இழப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் கலைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஏழு தசாப்த கலைத்துறையில் லதா மங்கேஷ்கர் பின்னணிப் பாடலில் ஒரு சக்தியாக இருந்தார்.

அவரது சிறப்பான திறமைக்காக, பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் மற்றும் தாதாசாகேப் பால்கே விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: