News Just In

2/03/2022 06:43:00 AM

உயிர் குமிழி பாதுகாப்பிலிருந்த சாமிக்க கருணாரத்னவுக்கும் கொவிட்!

அவுஸ்திரேலியாவுடனான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி புறப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இலக்காகக் கொண்ட உயிர் குமிழி (Bio Bubble)) முறையின் கீழிருந்தும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் சாமிக கருணாரத்ன ஆவார்.

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் டில்ஷான் பொன்சேகா ஆகியோருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்நாயக்கவுக்கும் ஏற்கனவே கொவிட் தொற்று ஏற்பட்டிருந்ததால், அவர் நாளை இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா செல்லமாட்டார்.

எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது இருபதுக்கு 20 போட்டிக்கு முன்னதாக ருமேஷ் இலங்கை அணியுடன் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தற்போது ஏற்பாடு செய்துள்ள நெசனல் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் கண்டி அணிக்காக விளையாடிய கமிந்து மெண்டிஸுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

No comments: